#பாடல்எழுதுவோம்
பாடல் வரிகள் எழுதுவது ஒரு வித வார்த்தை தொழிநுட்பம் தான் அதில் ஆழமான கருத்தும் ,செறிவும், அழகியலும் கைகூடும் போது அது சிறந்த பாடல் ஆக உயர்கிறது.
பாடல் என்பது சந்தர்ப்பங்களுக்கு கட்டுப்பட்டது. நாம் எழுதும் பாடல் கதையின் தேவையை தொட்டு செல்ல வேண்டும் முதலில் மிக முக்கியமாக . பின் சந்தமும் , இசை நயமும் அதில் இருக்க வேண்டும். போடப்படும் வார்த்தைகள் அந்த இசையின் மீது சென்று இயல்பாக அமரவேண்டும்.
"சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி."
பாடல் எழுத சொற்கள் வேண்டும் எடுக்க எடுக்க தீராமல் வரும் அளவு நம்முள் சொற்கள் இருக்க வேண்டும். அது வாசிக்க, வாசிக்க கை கொண்டுவிடும். சொற்களின் புதுமை பாடலை உயர்த்த செய்யும்.
"ஆ... இடம்பரி... வலம்புரி...
சுயம்பு நீ... நீ...
ஆ.. அஆ... பிரகாரம் நீ... பிரபாவம் நீ...
பிரபாகம் நீ... நீ...
ஆ..கா... ஸ்ருங்காரம் நீ...
ஆங்காரம் நீ... ஓங்காரம் நீ... நீ..."
அடுத்து பார்வை, எப்போதும் உலகில் நம் கண் முன் இருக்கும் நிகழ்வை கவிதை வரிகளாக்குவது. அது எப்போதும் நேரடியான காட்சியை ரசிகனின் கண் முன்னால் விரிய செய்யும். கிட்டத்தட்ட ஒரு நொடி நேர பார்வை தான் என்றாலும் அது கொடுக்கும் ஆழம் அலாதியானது.
"கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....
நம் காதல் தடைகளை தாங்கும்"
இப்படி ஒரு வடிவில் நீங்கள் எந்த பாடலுடைய இசைகோர்வையை எடுத்து முயன்றாலும் கண்டிப்பாக சில வரிகள் எழுதி விடலாம் .
அப்படி ஒரு முயற்சியாக " அனல் மேல பனித்துளி" பாடலுக்கான என்னுடைய வரிகள் உங்களுக்காக, (அந்த மெட்டிலே பாடி பாருங்கள்)
அலை நீட்டும் பெருங்கடல்
நுரை மீட்டும் சிறு மணல்
கரையோரம் இரு உடல்
எழுதாதோ புது மடல்
கரம் கோர்க்கும் உன் விரல்
சிரம் கேட்கும் என் குரல்
புறம் மறக்கும் நம் நிழல்
உந்தன் நினைவை நான் ஏந்தும் கனவொன்றை யார் அறிவார் ?
அந்த கனவில் உனை கவரும் கலை ஒன்றை இவள் புரிவாள்.
இரு விழிகள் எனை ரசிக்க விழித்து விட்டேன் உறக்கத்திலே
அறை முழுதும் நீ இருந்தாய் மயங்கி விட்டேன் கிறக்கத்திலே
தொடரட்டுமே இந்த இரவு.
நிஜமாகும் நேரம் வரும் வரை
உந்தன் வருகை எனை சேர நிழற்சாலை அழைக்கிறதே
இளம் பூக்கள் சுழன்று விழ நம் காதல் சிரிக்கிறதே
மனமெல்லாம் நிழல் கவிய உன் சொற்கள் குளிர்கிறதே
இவை யாவும் நீண்டு செல்ல ஒரு பாதை விரிகிறதே.
மீளட்டுமே உன் இதயம்
வாழ்வென்றும் உன்னோடு நடந்திட...
You can follow @sArAvAnA_15.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.